ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’.
எம்.பி.சிவகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பாலகணேஷ் இசையமைக்கிறார். ஜி.வி.சோழன் எடிட்டிங் செய்ய, க.முருகானந்தம் இணை தயாரிப்பை கவனிக்கிறார்.
ஜெமினி ராகவா தயாரிக்கும் இப்படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.
இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக இறைச்சி வகைகள் தொன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தா படம் இது என இயக்குநர் முத்து மனோகரன்கூறுகிறார்.