தமிழரசு வெற்றி:அனைவருக்கும் ஜஸ்கிறீம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 21, 2019

தமிழரசு வெற்றி:அனைவருக்கும் ஜஸ்கிறீம்?


தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது தொடர்முயற்சியால் தமிழர்களுக்கு மற்றுமொரு தீர்வை பெற்று வழங்கியுள்ளது.இதன் பிரகாரம் இன்று முதல் யாழ் நகரின் பண்ணை பகுதியில் ஜஸ்கிறீம் குடிக்க அனுமதியை தமிழரசு பெற்றுவழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த மாகாணசபை தேர்தலிற்கென கடை விரித்து காத்திருக்கின்ற நபர் ஒருவரால் மாநகர முதல்வர் ஆனோல்ட் சகிதம் பண்ணையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு தமிழ் அரசு கட்சியினர் பஸ்களில் மக்களை ஏற்றி வந்து உரிமையினை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இந்நிகழ்விற்கென மக்களை சந்திக்க நேரமில்லாத போதும் கூட்டமைப்பினர் அனைவரும் நேரம் ஒதுக்கியிருந்தனர்.

தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாநகர மற்றும் நகரசபை, பிரதேச சபை தலைவர்களும் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்கிரீம் கடையே தமிழரசின் இராஜதந்திர நகர்வுக்கு கிடைத்த வெற்றி எனவும். யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கட்டடத்தை தமிழரசு உறுப்பினரிற்கு ஒதுக்கி வழங்க கஷ்டப்பட்டதாக அங்கு உரை ஆற்றும் போது கூறினார்கள். இதனிடையே பஸ்சில் அழைத்து வரப்பட்ட  மக்கள் தமிழரசிறற்கு வாக்கு போட்டதால் ஐஸ்கிரீமாவது கிடைத்திரு;பபதாக மகிழ்சி அடைந்துள்ளனர்.