கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 27, 2019

கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி!


ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

இதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சப பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.