கிளிநொச்சி பளை பகுதியில் நடந்த பதைபதைக்கும் செயல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 4, 2019

கிளிநொச்சி பளை பகுதியில் நடந்த பதைபதைக்கும் செயல்!


கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறிகளுடன், இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த லொறி ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறியின் சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி மதுபோதையில் இருந்தமையே இந்த விபத்திற்கான காரணமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.