அடுப்பு பற்றவைத்தபோது ஆடையில் தீப்பிடித்ததால் 2 பிள்ளைகளின் தாய் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 4, 2019

அடுப்பு பற்றவைத்தபோது ஆடையில் தீப்பிடித்ததால் 2 பிள்ளைகளின் தாய் பலி!


அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்பில் ஊற்றிய மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.

மன்னார் - விளாத்திகுளம் , மடுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இலங்கேஸ்வரன் - ஜெனிற்றா , எனும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த 24ம் திகதி வீட்டில் சமயலில் ஈடுபட்டிருந்த சமயம் அடுப்பில் மண்ணென்ணை ஊற்றியுள்ளார்.

இதன்போது அவர் அணிந்திருந்த ஆடையிலும் மண்ணென்ணை பட்டமையினால் ஆடை மீது தீ பரவியது.

இந்நிலையில் தீயில் அகப்பட்ட பெண்மணியை உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் கடந்த 01ம் திகதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.