பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைக்கும் அதிசய கிராமம் - பெயர் தான் வேண்டாம் ஆனால் சாதித்தது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 13, 2019

பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைக்கும் அதிசய கிராமம் - பெயர் தான் வேண்டாம் ஆனால் சாதித்தது?தமிழகத்தின் திருத்தணியில் உள்ள நாராயணபுரம் எனும் கிராமத்தில் பெண் குழந்தையே இனி வேண்டாம் என்றால் கடைசி பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.

இந்த வழக்கத்தால் அந்த கிராமத்தில் பல ‘வேண்டாம்’ என்ற பெயரைக் கொண்ட பெண்கள் உள்ளனர்.

இவ்வாறு, வேண்டாம் எனப் பெயர் வைக்கப்பட்ட ஒரு மாணவி , இந்த பெயரால் பள்ளியில் தோழிகளின் கிண்டலுக்கு உள்ளாகியும், அதேநேரத்தில் மன உறுதியுடனும் படித்தார் 


இந்நிலையில் தற்போது அவர் சென்னை அருகே உள்ள பொறியியற் கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்து வரும் ‘வேண்டாம்’ என்ற பெயர் கொண்ட குறித்த மாணவி சமீபத்தில் பல்கலைக்கழக நேர்முகத் தேர்வில் தெரிவானார்.

அவரை ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.23 இலட்சம் ஊதியத்தில் பணியமர்த்த ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அவர் ஜப்பான் செல்லவுள்ளார்.

இதேவேளை தோழிகளும் உறவினர்களும் தனது பெயரை கிண்டல் செய்தபோதிலும் வைராக்கியத்துடன் படித்ததாகவும், நல்ல நிலைமைக்கு வந்த பின்னர் பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், ஆனால் இனிமேல் பெயரை மாற்ற விரும்பவில்லை என்றும், இதே பெயரிலேயே கடைசி வரை வாழப்போவதாகவும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேலாவது பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் அருமையை புரிந்துகொண்டு இதுபோன்ற பெயர்களை வைக்க வேண்டாம் என குறித்த மாணவி தனது கிராமத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.