கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று காலை 8.30 மணியளவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவமோதர பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சுமார் 45 பயணிகள், பயணித்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த பேருந்து தண்டவாளத்தில் மோதுண்டிருந்த நிலையில், அந்த தொடரூந்து பாதையில் பயணித்த தொடரூந்து ஒன்று விபத்து இடம்பெற்ற அருகில் வந்தே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்