நாட்டு மக்களின் ஆதரவு பிரதமருக்கு இனி ஒருபோதும் கிடைக்காது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 13, 2019

நாட்டு மக்களின் ஆதரவு பிரதமருக்கு இனி ஒருபோதும் கிடைக்காதுபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டு மக்களின் ஆதரவு இனி ஒருபோதும் கிடைக்காது என்றும் சிங்கள மக்களின் பெரும்பான்மை விருப்பு இனி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்திற்கு அமையவே செயற்படுகின்றதாகவும், சிங்கள பெரும்பான்மையினரின் கருத்துக்கள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடித்து இவ்விரு தரப்பினரும் இடைப்பட்ட காலத்தில் தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற நம்பிக்கையினை வெற்றிக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருபோதும் இனி மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.