பிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இனப் பிரச்சினைக்கு இரண்டு வருடத்திற்குள் தீர்வு பெற்றுத்தரப்படுமென குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பிரதமர் ரணிலின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது. பிரதமரின் இந்தக் கருத்துக்களில் ஒருவித உண்மையும் இல்லை.
வெறுமனே தேர்தலுக்கான வாக்குகளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்றும் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.