திருகோணமலை, மொறவெவ பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம். ஹம்ஸா நேற்று பிறப்பித்துள்ளார்.
மஹதிவுல்வெவ, மொறவெவ பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்த பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக அவர்களிற்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது.
குறித்த வழக்கின் போது, வழக்குத் தவனைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.