சுயநலத்துடன் தமிழர்களை ஏமாற்றிய கூட்டமைப்பு! ஆக்கிரமிக்கப்படும் கோயில்களின் பின்னணியில் யார் தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 20, 2019

சுயநலத்துடன் தமிழர்களை ஏமாற்றிய கூட்டமைப்பு! ஆக்கிரமிக்கப்படும் கோயில்களின் பின்னணியில் யார் தெரியுமா?



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

போராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றுவரை எமது நிலை தொடர்பாக தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர்.

வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயநலம் சார்ந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளனர்.