அரசுக்கு முண்டு கொடுத்த சாயம் வெழுத்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

அரசுக்கு முண்டு கொடுத்த சாயம் வெழுத்தது!

சம்பந்தரின் மண்டேலா புலிகள் பற்றி பழி சுமத்தினார் என சம்பந்தரின் அடிவருடிகள் மட்டுமல்லாது மற்றும் கெளரவ மாமா சுத்துமாத்துமந்திரன் கூட பொங்கி எழுவதாக பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசுக்கு முண்டு கொடுத்த சாயம் வெழுத்து மக்கள் முன்னால் அம்பலப்பட்டுப்போய் இருப்பதாலும் விரைவில் தேர்தல் வர இருப்பதனாலும் தமதி விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பேத்த கெளரவ மாமா அவர்கள் இப்படி சொல்வது புரிகிறது.

ஆனால் இதே கெளரவ மாமா சுத்துமாத்துமந்திரன் அவர்கள் 2012 ஆம் ஆண்டு The Island பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களை பற்றி எழுத்தில் பதிவு செய்த விடயம் இது

“ஒரு மாயைக்குள் மூழ்கியிருந்த, வேலையில்லாத ,கோபக்கார இளைஞர்களே அரசுக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்கள்”

it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South.

http://island.lk/index.php…

தம் வாழ்வை , வாழ்வின் கனவுகளை ம் உயிரை அர்ப்பணித்து மக்களுக்காக போராட தலைப்பட்டவர்களை பற்றி வேலையில்லாத மாயையில் சிக்கியிருந்த இளைஞர்கள் என கெளரவ மாமா அவர்கள் எழுத்தில் பகிரங்கமாக பதிவு செய்து புலிநீக்க அரசியலை , புலிகளை கேவலப்படுத்தும் அரசியலை செய்ய முற்பட்டு மூக்குடைப்பட்டதை மறந்து , இப்போது தேர்தலுக்காக பொங்கி எழுவதாக காட்டிக்கொள்ளும் கெளரவ மாமா அவர்கள் செய்வது ஒன்றும் புதிதல்ல, என்ன டக்ளஸ் செய்யாததையா அவர் செய்கிறார்?
ஆனால் அந்த நாடகத்தை பார்த்து பொங்கி புள்காங்கிதம் அடைகிற விசிலடிச்சான் குஞ்சுகளை நினைக்கத்தான்...... உருப்படவே மாட்ட்டார்களா என்கிற பரிதாபம் வருகிறது, பாவம் விசிலடிச்சான் குஞ்சூஸ்.
நீங்கள் இப்படி சொம்புத்தனமாக இருக்கிற துணிவில தான் இவர் ,,அங்க அப்பிடி ஒரு கதை , இங்க இப்படி ஒரு கதை விட்டு பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில இருக்கிறார்.
.
சிங்கள தேசத்து ஜனாதிபதியோ , சிங்கள தேசத்து செருப்போ என்னவும் கதைக்கட்டும் .

நாய்கள் குரைத்து சூரியனுக்கு ஒன்றும் ஆவதில்லை!
புனிதர்கள் புனிதர்களே.