தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடியவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்! மைத்திரியை விளாசிய எம்.பி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடியவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்! மைத்திரியை விளாசிய எம்.பி!


தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார்.

தமிழ் பெண்கள் தமது தாலியினை கூட வழங்கி அன்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள். தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார்.

அவரது இந்த செயற்பாடு தமிழ் மக்களை வெகுவாக பாதித்துள்ளதுடன் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக ரன் மாவத் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய வீதியினை காபட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

போதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தும் அளவிற்கு தலைவர் பிரபாகரன் இருக்கவில்லை. ஓட்டுமொத்த தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதிப்பங்களிப்புடனும் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடனுமே அவர் போராட்டத்தை முன்னெடுத்தார். பெண்கள் தமது தாலியினை கூட வழங்கி அன்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள்.

இந்நிலையில் தமிழ் மக்களினால் தியாகியாகவும் கடவுளாகவும் பார்க்கப்பட்ட அவரது போராட்டத்தையும் போதைப்பொருளையும் ஒப்பிட்டு ஜனாதிபதி கொச்சைப்படுத்தியதானது தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல தந்திரோபாயமான திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகின்றது.

தீர்வு திட்டத்தினை பெறுவதற்கு ஒரு புறம் முயற்சிகளை மேற்கொள்ளும் போது நலிவுற்ற தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பல செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றது என்றார். ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளரும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பதவியுர்வு பெற்று செல்பவருமான ரி.கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்