கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம் - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, July 26, 2019

கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்


கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயில் வரும் வேளையில் கை தவறி மோட்டார் சைக்கிள் இயங்கி, ரயில் வீதியை நோக்கி பயணித்துள்ளது. குறித்த நேரத்தில் கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

கந்தான பிரதேசத்தை சேர்ந்த திலினி சத்துரிக்கா என்ற 25 வயதான பட்டதாரி பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தவறினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.