பயணப் பொதிகளுடன் சென்ற குழந்தை! வானூர்தி நிலையத்தில் பரபரப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 26, 2019

பயணப் பொதிகளுடன் சென்ற குழந்தை! வானூர்தி நிலையத்தில் பரபரப்பு!

அமெரிக்கா அட்லான்டா மாநிலத்தில் அமைந்துள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச வானூர்தி நிலையத்தில் (Hartsfield-Jackson International Airport) பயணம் செய்யச் சென்ற பெண் ஒருவர் போடிங் பாஸ்சை பிரின்ட் எடுப்பதற்காக தனது 2 வயதுக் குழந்தையை கீழே இறக்கிவிட்டார்.

குறித்த குழந்தை பயணப் பொதிகள் அனுப்பும் கொன்வேயர் பெல்டில் (conveyor belt) விளையாட்டுக்கு ஏறியபோது லோறென்சோ என்ற குழந்தை கொன்வேயர் பெல்ட் வழியாக பயணப் பொதி செல்லும் அறைக்குள் வீழ்ந்துள்ளது.

குறித்த சில நொடிகளில் தயார் திரும்பிப் பார்த்த போது பிள்ளை கொன்வேயர் பெல்ட் வழியாக செல்வதை அவதானித்த அங்கிருந்த ஊழியர்களிடன் கூறிப் பதைபதைதார்.

இதேநேரம் குழந்தை கொன்வேயர் பெல்ட் வழியே செல்வதை கண்காணிப்புக் கமரா அவதானித்த அதிகாரிகள் தகவலை ஏனைய அதிகாரிகளுக்கு அறிவிக்க குழந்தையை மீட்கும் பணியில் குதித்தனர்.

குழந்தை பயணப்பொதியின் கண்காணிப்பு அறைக்குள் சென்றபோது குழந்தை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தையின் கை ஒன்று முறிந்துள்ளதாக வானூர்தி நிலையச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.