ஏன் உங்களால் கோத்தாவுக்கு ஆதரவு வழங்க முடியாது? கூட்டமைப்பை பார்த்து கேட்ட கருணா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 26, 2019

ஏன் உங்களால் கோத்தாவுக்கு ஆதரவு வழங்க முடியாது? கூட்டமைப்பை பார்த்து கேட்ட கருணா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவுடன் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இராணுவத் தளபதி பதவி வகிந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க முடியாது.

மேலும், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எந்த தலைமைகளின் தீர்மானத்திற்கும் அமைய அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமல் தனித்து யதார்த்த நிலையினை தீர்மானங்களை முன்னெடுக்காமல் தனித்து யதார்த்த நிலையினை உணர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.