தம்புள்ள- கல்கிரியாகம ஹரத்தலாவ பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபா் ஒருவரை சிறுமியின் தந்தை அடித்தே கொலை செய்துள்ளார்.
47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்து வயதான சிறுமியொருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபரை, சிறுமியின் தந்தையும், ஊர் மக்களும் இணைந்து தாக்கியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் உயிரிழந்ததோடு மற்றுமொரு நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.