ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை- மஹிந்த தேசப்பிரிய - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 20, 2019

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை- மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நடாத்த முடியுமாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்பார்த்த தினத்திலேயே நடாத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லையென தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் போது அந்தத் தேர்தல் தேவை என குரல் எழுப்பியவர்கள் தம்மீது இப்போது குற்றம்சாட்டுவதோடு, ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் சதியாக இதனைச் சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை. அது உரிய முறையில் நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை வைத்து பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான பிரகாரம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை இன்றிரவு விடுத்தாலும், நாளை தேர்தலை நடாத்த தேவையான நடவடிக்கையை தம்மால் முன்னெடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.