யாழ் மாநகரை ஆக்கிரமித்துள்ள 5ஜி தொழில்நுட்பம் கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் குறித்த தொழில்நுட்ப வசதி எமது பிரதேசத்திற்கு தேவை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 2ஜி, 3ஜி வசதிகளையே தாம் தடுத்ததாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், இவ்வாறான தொழில்நுட்பத்தினால் விவசாயத்திற்கு உதவும் பூச்சிகள், பறவைகள் பலவும் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்தே அவற்றை தாம் தடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளார்