கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் பெருமளவு நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு சவுதி அரேபிய அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பினால் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக பணம் கிடைத்துள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பணம் இலங்கை அரச வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பினால் வழங்கப்பட்ட பணத்தின் சட்ட ரீதியான தன்மை, குறித்த பணம் பல்கலைக்கழக நிர்மாணிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது பயங்கரவாத செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது