யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 24, 2019

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்!



யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் தொழில் நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.