மரண தண்டனை கைதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

மரண தண்டனை கைதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!மரண தண்டனை விதிக்கப்பட உள்ள கைதிகள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை தகவல் அறியும் ஆணைக்குழு , சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் விடுத்துள்ளது.

அந்தவகையில் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள முதல் இருபது கைதிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ள திகதி, வழக்கு எண் மற்றும் மரண தண்டனை குறித்த சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் மற்றும் ஊடகவியலாளர் மிலிந்த செனவிரட்ன ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு கைதிகளின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது