இலங்கை ரீதியில் சில தினங்களாக நடத்தி வந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 1808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலால் வரித்திணைக்களத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 60 லட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம், கோடா, ஸ்பிரிட், வடிகட்டும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்