இலங்கை விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சர்வதேசத்திற்கு மஹிந்த எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, July 29, 2019

இலங்கை விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சர்வதேசத்திற்கு மஹிந்த எச்சரிக்கை!

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில், மத்திய தர வர்க்கத்தினரை உயர்த்தும் வேலைத் திட்டங்களையே நாம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தோம்.

ஆனால், இன்று அனைத்தும் தலைகீழாகிவிட்டன. நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் கைகளில் இன்று பணமில்லை. இதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது.

அத்தோடு, சர்வதேசம் தற்போது இலங்கையின் அனைத்து விடயங்களிலும் தலையிடுகின்றது. இதனை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதவில்லை.

சர்வதேசத்திடம் நாம் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறோம். இந்த செயற்பாட்டை கைவிடுங்கள். உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

இந்த தரப்பினர், நாட்டுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தவும் முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இதனை நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாம் அவதானமாக செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.