10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை – நிந்தவூரில் பரபரப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 29, 2019

10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை – நிந்தவூரில் பரபரப்பு



சம்மாந்துறை – நிந்தவூரில் 10 மாத இரட்டையர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் குளியலறையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த 10 மாத இரட்டையர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது எனினும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.