இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இரத்தத்தில் கடிதம் எழுதியிருக்கின்றனர்.
22 வயதான நிஷா மற்றும் 23 வயதான அமன்ஜோத் கவுர் ஆகிய பெண்கள், பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் வசித்து வருகின்றனர். இருவர் மீது இரண்டு தனித்தனியான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் மீது தவறான பொலிஸ் புகார் கொடுக்கப்பட்டு தொடர் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நிஷா என்கிற பெண் தன்னுடைய உறவினர் ஒருவரை ஜேர்மனிக்கு அனுப்புவதற்காக கடன் வாங்கிவிட்டு, அதில் ரூ.5 லட்சத்தை திரும்ப செலுத்தாமல் மறுத்துள்ளார்.
அதேபோல அமன்ஜோத் கவுர் என்கிற பெண் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வாங்கிய கடன் பணத்தில் 1.20 லட்சத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக நான் கேள்விப்பட்டோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் வழக்கு விசாரணையை முடித்து வைப்போம் என தெரிவித்துள்ளார்.