அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, July 7, 2019

அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம்
மேலும் ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய 6 ராஜபக்ஷர்கள் இணைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு ஊடாக முழு இலங்கையும் பிரதித நிதித்துவ படுத்தப்படுவதாகவும் அதனூடாக வெற்றி பெறக்கூடய தலைவர் ஒருவரை தெரிவு நியமிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் எனவும் மேலும் 6 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.