2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி பிரின்ஸ்சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஆயுள் தண்டனைக்கு சரணடையும் கெடு இன்றுடன் முடிவடைகிறது.
சரவணபவன் ஹொட்டலில் வேலை பார்த்து மேலாளரின் மகள் ஜீவஜோதி மீது ராஜகோபலுக்கு ஈர்ப்பு இருந்து வந்துள்ளது. மேலும், ஜோதிடர் ஒருவர் ஜீவஜோதியை திருமணம் செய்தால், தொழில் முன்னேறலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜீவஜோதி பிரின்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் பிரின்ஸை கொடைக்கானலுக்கு தூக்கி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கே புதைத்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையை சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உட்பட 8 பேர் சேர்ந்து செய்தததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது
இந்த வழக்கு விசாரணையில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜகோபால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும் வலுவாக இருந்த காரணத்தால் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.
அவர் ஜூலை 7ம் திகதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்தது. இன்றுடன் கெடு முடிவடைய உள்ள நிலையில், இன்று அவர் ஆஜராவாரா மாட்டாரா என்ற கேள்வி நிலவி வருகின்றது.