கடலுக்குச் சென்றவர்களை கரை திரும்புமாறு உத்தரவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 18, 2019

கடலுக்குச் சென்றவர்களை கரை திரும்புமாறு உத்தரவு


இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையில், கடலுக்கு சென்ற மீனவா்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புமாறு கடற்படை எச்சாிக்கை விடுத்துள்ளது. 
சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கடற் பிரதேசங்களிலும் கடும் காற்றுடனான மழையும், கொந்தளிப்பு நிலையும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறான நிலையிலேயே கடற்படை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், 
கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார மீனவர்களை கேட்டுள்ளார். இதேவேளை, தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கலாம் 
என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக 
பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். இந்தக் கடல் பிரதேசங்களில் இடையிடையே கொந்தளிப்பு ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், 
இன்று மாலை வரை மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது