நுவரெலிய கந்தபளை தோட்ட பகுதியில் உள்ள மாடசாமி ஆலயத்தில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிா்ப்பு தொிவித்து மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோட்ட பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலநருவ பகுதியைச் சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்த பெளத்த கொடி ஏற்றபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தோட்ட மக்களால் கந்தபளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. பொலிஸ் அத்தியட்சகர்,
நுவரெலியா பிரதேச சபை தலைவர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடி அகற்றப்பட்டது.அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்
எனத் தெரிவிக்கப்படுகிறது.