வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் - ஒருவரது சடலம் மீட்பு - மற்றவரை காணவில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 18, 2019

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் - ஒருவரது சடலம் மீட்பு - மற்றவரை காணவில்லைஅக்கரபத்தன பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரு பாடசாலை மாணவிகளில் ஒருவா் உயிாிழந்த நிலையில் காணாமல்போன மற்றய மாணவியை தேடும் பணிகள் கொட்டும் மழைக்கும் மத்தியில் தொடா்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல

முயன்ற மாணவிகள் இருவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்: காணாமல் போயிருந்த நிலையில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு,

மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.உயிரிழந்த மாணவியின் சடலம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை காவல்துறையினர்

மேற்கொண்டு வருகின்றனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனா்.