காலி அக்மீமன பகுதியில் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் ஒருவர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் பாடசாலைக்குள் நுழைய முன்றபோது, பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவச்சிப்பாய்கள் அவரை தடுத்துள்ளனர்.
எனினும், அதையும் மீறி அவர் உள்ளே நுழைய முயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த நபர்மீது மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்ற்து.