கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்! செல்பியால் பிரிந்த உயிர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 1, 2019

கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்! செல்பியால் பிரிந்த உயிர்!அரியலூர் மாவட்டத்திக் நம்மங்குணம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடர்மணி, இவரது மனைவி சங்கீதா, திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இவரும், சரவணன் என்பவரும் வேலை செய்து வருகின்றனர்.

ஒரே கிராமம் என்பதால் சுடர்மணியின் வீட்டுக்கு சரவணன் வரும்போது, சங்கீதாவுடன் தகாத பழக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து சுடர்மணிக்கு மது வாங்கி கொடுத்து விட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர், செல்பியும் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுடர்மணிக்கு தெரியவர வீட்டில் பிரச்சனை வெடித்ததால், அம்மா வீட்டில் சங்கீதா வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்பி படங்களை காட்டி சங்கீதாவை மிரட்டிய சரவணன், ஆசைக்கு இணங்க மறுத்தால் வாட்ஸ் அப் மற்றும் நெட்டில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி அறிவழகன் கேட்டதால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதனை தொடர்ந்து சங்கீதாவின் தந்தை செந்துறை பொலிசில் சரவணன் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என சங்கீதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.