உடலில் விஷம் கலப்பதால் உயிரிழப்போர் தொகையில் வீழ்ச்சி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 1, 2019

உடலில் விஷம் கலப்பதால் உயிரிழப்போர் தொகையில் வீழ்ச்சி!

உடலில் விஷம் சேர்வதன் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை பல வருடங்களாக ஒரே அளவில் காணப்படுகின்றது என்று இலங்கையின் தேசிய நச்சு தொடர்பான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விஷம் உடலில் கலந்தால் தொலைபேசியின் ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய நச்சு தொடர்பான மத்திய நிலையத்தின் வைத்தியர் சமந்த லியனகே குறிப்பிட்டுள்ளார்.

இத்தொடர்பினை ஏற்படுத்துவதற்கு 0112-68-61-43 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கமுடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் விசம் தொடர்பில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.