இறுதி யுத்தக் காலத்தில் விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லையாம் – பொய் கூறும் இலங்கை இராணுவம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

இறுதி யுத்தக் காலத்தில் விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லையாம் – பொய் கூறும் இலங்கை இராணுவம்?

இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகை ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ.அத்தபத்து என்பவரினால் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தமிழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை. அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர் என குறித்த பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரங்கொண்ட நிறுவனமான புனர்வாழ்வு ஆணையாளர் காரியாலயத்திடம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.