மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞனை ஆவா குழுவென அடையாளப்படுத்த இலங்கை காவல்துறை பகீரத முய்றசிகளை ஆரம்பித்துள்ளது.
இதனிடையே இளைஞனின் சொந்த ஊரான கொடிகாமத்தில் பதற்றம் நிலவுவதுடன் ஊடகங்களிற்கு செய்தி சேகரிக்க தாயார் மற்றும் இளைஞர்கள் சிலர் இன்று தடை ஏற்படுத்தியுள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் தொலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.