புத்தர் முகத்தில் கரி பூசிய விசமிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

புத்தர் முகத்தில் கரி பூசிய விசமிகள்!


கம்பஹா - நிட்டம்புவ நகரத்தில் இருந்த புத்தர் சிலையின் தலை பகுதியில் கறுப்பு நிற சாயம் பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தங்க நிறம் பூசப்பட்டிருந்த புத்தர் சிலைக்கு மேல் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஸ்பிரே இயந்திரம் பயன்படுத்தி இவ்வாறு நிறத்தை மாற்றியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ இளைஞர் பௌத்த சங்கம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது