பாதுகாப்பான ரயில் கடவை வேண்டும்- கிளிநொச்சியில் போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

பாதுகாப்பான ரயில் கடவை வேண்டும்- கிளிநொச்சியில் போராட்டம்!


கிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் உள்ள ரயில் கடவையை பாதுகாப்புக் கடவையாக அமைக்குமாறு கோரி குறித்த பிரதேச மக்களால் இன்று புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தால் யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர்.

ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மின்னால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் கூறினர். 
வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டனர்.