உயிர்த்த ஞாயிற்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய வேறு ஒருவர் வெளியில் உள்ளார் என பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடியது. இதில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதே இத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். இதன்போது சாட்சியமளித்த அவர்,
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பயிற்சி பெற்ற பயிற்சி வழங்ககூடிய ஒருவர் வெளியில் இருப்பது அச்சுறுத்தலாகும். அதுபோன்ற ஒருவர் வெளியில் இருக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சகல தரப்பிலும் சுமார் இரண்டாயிரம் பேர் அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பலர் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க முடியும்.
ஆனால் எனது கட்டுப்பாட்டில் தடுப்புக்காவலில் உள்ள 32 பேரும் ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்கள் என்பது உறுதியான தகவல். இவர்களை கண்டிப்பாக சட்டத்தின் முன்னால் நிறுத்தியாக வேண்டும் என்றார்.