மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 24, 2019

மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம்



மன்னாா் மத்திய பேருந்து தாிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எாிந்துள்ளது.

இதில் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகி உள்ளது.

இந்நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


மேலும் தீ ஏற்பட்டமைக்கான மின் ஒழுக்கா?அல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.