பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, July 6, 2019

பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி!

நாரஹன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். 

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவருக்கு 2017ம் ஆண்டு திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தற்போது நாரஹன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.