காத்தான்குடியில் 20 பேர் கொலை: தேரர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 5, 2019

காத்தான்குடியில் 20 பேர் கொலை: தேரர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்காத்தான்குடியில், ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான ஆதாரங்களும் தரவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

வகாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மாநாடு ஒன்று நுகேகொரடையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தபோதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நான் விசேட தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தேன்.

அதாவது, காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதாவது, இந்த செயற்பாட்டுக்காக 20 பேர் ஷரியா சட்டத்திற்கு இணங்க, காத்தான்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கான அனைத்துத் தரவுகளும் என்னிடம் உள்ளன. இனியும் நாம் பிரிந்து செயற்பட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும்” என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.