பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை தொடக்கிவைத்தாா் அமைச்சா் அர்ஜூன ரணதுங்க - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 5, 2019

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை தொடக்கிவைத்தாா் அமைச்சா் அர்ஜூன ரணதுங்கசா்வதேச விமான நிலையமாக 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளை அங்குரா்ப்பணம் செய்துவைத்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.

ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாகவும், விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.


பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது