நேற்றையதினம் வாட்ஸ்ஆப், பேஸ்புக், செயலிழந்தமைக்கான காரணம் இதுதான்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 4, 2019

நேற்றையதினம் வாட்ஸ்ஆப், பேஸ்புக், செயலிழந்தமைக்கான காரணம் இதுதான்!


வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள், நேற்று உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய செயலிழப்பை தந்தது. இந்நிலையில் மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட இந்த செயலிழப்பை, '100 சதவிகிதம்' மீட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த செயலிழப்பினால், உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இணைய கண்கானிப்பு சேவையான டவுன்டிடெக்டர் (DownDetector) அளித்துள்ள தகவலின்படி இந்த செயலிழப்பு நேற்று மாலை 5:30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் மட்டுமின்றி வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செயலிழப்பு பிரச்னை, முழுவதுமான சரி செய்யப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் இன்று காலை 5:36 மணிக்கு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முகநூல் நிறுவனத்தின் தரப்பில் வெளியிடப்ப்ட்ட தகவலில், "இந்த பிரச்னை முழுவதுமாக சரி செய்யப்பட்டது, நாங்கள் 100 சதவிகிதம் இந்த செயலிழப்பை மீட்டுவிட்டோம்" என குறிப்பிட்டிருந்தது. மேலும்,"தடங்கலுக்கு மன்னிக்கவும்" எனவும் கூறியிருந்தது

இதேவேளை பேஸ்புக்குடன் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் ஏற்பட்ட செயலிழப்பு குறித்து, பேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'வழக்கமான பராமரிப்பு செயல்பாடு' பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் ஒரு பக் (Bug) தவறுதலாக தூண்டப்பட்டது. இந்த பக் தூண்டுதலின் காரணமாகவே, பயன்பாட்டாளர்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற முடியவில்லை என அவர் கூறியிருந்ததாக அமெரிக்க ஊடகம் தெரிவித்திருந்தது.

குறித்த பிரச்சனை காரணமாக நேற்றையதினம் டிவிட்டரில் '#Facebookdown' மற்றும் #instagramdown என்ற ஹேஸ்டெக்கள் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி இருந்தன.



டவுன்டிடெக்டர் மேலும் அளித்துள்ள தகவலின்படி, இந்த செயலிழப்பு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதன் தாக்கம் முக்கியமாக ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்காவில்தான் அதிகமாக இருந்ததாகவும், தனிக்கணக்குகள் மட்டுமின்றி, தொழில் மற்றும் அமைப்பு கணக்குகளும் இந்த செயலிழப்பால் பாதிப்பை சந்தித்துள்ளது என குறித்த கண்கானிப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த செயலிழப்பு காரணமாக அமெரிக்காவில் மத்திய புலனாய்வு ஏஜென்சியும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. "நாங்களும் இந்த #instagramdown-னால் பாதிக்கப்பட்டுள்ளோம்" என அமெரிக்கா புலனாய்வு டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தது.

பேஸ்புக் இம்மாதிரியான செயலிழப்புகளை சந்திப்பது இது முதன்முறையல்ல. இந்த ஆண்டின் துவக்கத்தில் 24 மணி நேர சேவை பாதிப்பை பேஸ்புக் சந்தித்துள்ளமை நினைவில்கொள்ளத்தக்கது. கடந்த மார்ச் 13 அன்று ஏற்பட்ட 24 மணி நேர செயலிழப்பே இந்த இணைய ஜாம்பவானின் முகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது

இந்த பாதிப்பால் சுமார் 2.7 பில்லியன் மக்கள் பாதிப்புக்கு ஆளானதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு பேஸ்புக் கூறும் காரணம் 'சேவையக உள்ளமைவு மாற்றம்' (server configuration change) என்பதே.