நீர்கொழும்பு தலுபொத்த கால்வாயில் டி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷை அழைத்துச் சென்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மாகந்துரே மதூஷின் மீது 10 கொலைகள், 3 கொலை முயற்சி, 3 திருட்டு குற்றச்சாட்டு ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு குற்றச்சாட்டுக்கள் மற்றும் 18 கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அவர், டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.