நதிகளை பாஜக நிச்சையமாக இணைக்கும்; ரஜினிகாந்த், - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

நதிகளை பாஜக நிச்சையமாக இணைக்கும்; ரஜினிகாந்த்,


நதிநீர் இணைப்புகளை  பாஜக நிச்சயமாக செய்வார்கள் என்ற நம்பிக்கை தற்போதும் தனக்குஇருப்பதக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
படபிடிப்பில் இருந்து திரும்பிய அவர் சென்னை வானூர்தி நிலையத்தில் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார் மேலும் அங்கு கூறியதாவது.
 
குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது என்று கூறிய அவர்.

மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உட்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்