முல்லைத்தீவில் மாற்று வலுவுடைய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

முல்லைத்தீவில் மாற்று வலுவுடைய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு – வள்ளிபுனம்,  இனியவாழ்வு இல்லத்தின் மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்திருந்தனர்.

வள்ளிபுனம்- காளிகோவிலடியிலிருந்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர்   ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்களுடன் ஏனைய பழைய மாணவர்களும் இணைந்து, 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, 1. நிறுவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்பட வேண்டும்.

2. நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிறுவனம் ஒப்படைக்கப்பட வேண்டும்

3. நிர்வாகச் செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பது நிறுத்த வேண்டும்.

4. பழைய மாணவர்களை நிபந்தனையற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்பட வேண்டும்.

5. அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிறுத்த வேண்டும்

6. சமூக சேவைத் திணைக்களத்தின் அரச ஊழியராக இருந்து கொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் இல்லத்தின் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும்.

7. மக்கள் பிரதிநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையில் இருந்து வெளியேற வேண்டும்.

8. 11 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்பட வேண்டும்.

9. மேற்குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும் பழைய மாணவர்கள் இருவருமாக இணைந்து குழு அமைக்கப்பட வேண்டும்.

10. 6ஆம் இலக்கம் 7ஆம் இலக்கம் ஆகிய கோரிக்கைகள் உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.