இந்தியாவின் காஷ்மீர மாநிலத்தின் புல்வாமா அவந்திவோரா நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்நாடு இந்த தகவலை கொடுத்துள்ளது. இதே போல அமெரிக்காவும் புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவை எச்சரித்து உள்ளது.
பாகிஸ்தான், அமெரிக்கா கொடுத்த தகவல் அடிப்படையில் காஷ்மீர் மாநிலம் முழுவதும் இராணுவத்தினர் விழிப்படையச் செய்ததோடு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.