அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 3, 2019

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

எனினும், ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையிலேயே அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார்