கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி ஆறாவது
நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கும்முகமாக சிங்கள பௌத்த அமைப்புகளும் தமிழர்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆறாவது நாளாக இடம்பெறும் போராட்டத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரோ தேரர் வருகை தர உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் போராட்டக்காரர்களை சந்திக்க இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.